பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப் போலவும்,
வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப் போலவும் எங்கள் தேவனாகிய
கர்த்தர் எங்களுக்கு (திருத்துறைப்பூண்டிக்கு) இரக்கஞ்செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள்
அவரை (இயேசுவை) நோக்கியிருக்கிறது. எங்களுக்கு (திருத்துறைப்பூண்டிக்கு) இரங்கும்
கர்த்தாவே எங்களுக்கு (திருத்துறைப்பூண்டிக்கு)
இரங்கும். சங்கீதம் 123:1-3
1. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களுக்காகவும் தேவனை ஸ்தோத்தரித்து ஜெபிப்போம்.
2. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் சுவிசேஷ வாசல்கள் திறக்கப்பட, ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை
ஏற்றுக் கொள்ள, இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
3. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் தேவனுடைய
வல்லமை வெளிப்பட, ஜனங்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட, ஆவி, ஆத்ம சரீரத்தில் விடுதலையைப்
பெற்றுக் கொள்ள ஜெபிப்போம்.
4. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் கிரியை செய்கிற குடிகார ஆவி, விபச்சார வேசித்தன ஆவி,
தகடு, தாயத்து, பாரம்பரியம், மூடப்பழக்கவழக்கங்கள், தற்கொலை ஒழிய, சத்துருவின் வல்லமைகள்
கட்டப்பட ஜெபிப்போம்.
5. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தப்பட, ஜெபக் குழுக்கள் எழும்ப ஜெபிப்போம்.
6. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் இருக்கிற வாலிபர்கள் சந்திக்கப்பட, காதல், குடி, போதை,
பாவப் பழக்கங்களிலிருந்து விடுதலையாக்கப்பட, இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள ஜெபிப்போம்.
7. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் செயல்படுகிற சுவிஷேச எதிர்ப்பாளர்கள் சந்திக்கப்பட,
சுவிஷேசத் தடைகள் நீங்க ஜெபிப்போம்.
8. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பரிசுத்தமாய்,
சாட்சியாய் வாழ, ஆத்துமா ஆதாயம் செய்ய, சீஷர்களாக மாற, சபைகள் வளர்ந்து பெருக ஜெபிப்போம்.
9. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள
77 கிராமங்களில் காணப்படுகிற வறுமைகள் மாற, விவசாயத்தை நம்பியுள்ள ஜனங்களுக்கு
மழையை தேவன் கட்டளையிட, கிராமங்கள் ஆசிர்வதிக்கப்பட ஜெபிப்போம்.
10. திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள
77 கிராமங்களில் சுவிஷேசம் அறிவிக்கப்பட, தடையாயிருக்கிற கிராமக்கட்டுப்பாடுகள்,
ஜாதிக்கட்டுப்பாடுகள் நீங்க, ஊர்த் தலைவர் கண்களில் தேவனின் தயவு கிடைக்கச் செய்ய,
ஊர்த் தலைவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
No comments:
Post a Comment