Wednesday, 28 September 2016

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்காக ஜெபியுங்கள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் வாழும்  விவசாயிகளுக்காக ஜெபியுங்கள்


1.       விவசாயிகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்ள, இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

2.       விவசாயத்திற்குத் தேவையான மழையை தேவன் கட்டளையிட, விளைச்சல் காற்றினால், பூச்சிகளால், பெரு மழையினால் பாதிக்காதபடி, நல்ல விளைச்சல் உண்டாக ஜெபிப்போம்.

3.       குடி, போதை, பாவப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்கள், விடுதலையாக்கப்பட, மனந்திரும்புதல் உண்டாக ஜெபிப்போம்.

4.        விவசாயம் குறைந்து ரியல் எஸ்டேட்டாக மாறி வருகிறது. இந்த நிலை மாற, விவசாயத்தில் நஷ்டம் உண்டாகாதபடி, நல்ல வருமானம் கிடைக்க ஜெபிப்போம்.

5.       விலைவாசி உயர்வுக்குக் காரணமாயிருக்கிற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்க, விவசாயத்திற்குத் தேவையான மூல பொருட்களின் விலை குறைய ஜெபிப்போம்.

6.       அரசின் மூலமாய் விவசாயிகளுக்கு மானியம், விவசாயக்கடன் போன்ற சலுகைகள் எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்கப்பட, விவசாயிகள் அதைச் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள ஜெபிப்போம்.

7.       படிப்பறிவு இல்லாத மக்கள் மத்தியில் சுவிஷேச கூட்டங்கள் நடத்தும் போது இயேசுவின் திரைப்படங்கள், நாடகங்கள், செய்திகள் மூலமாக இயேசுவை அவர்கள் ஏற்றுக் கொள்ள ஜெபிப்போம்.

8.       விவசாயக் குடும்பங்களில் கணவன் மனைவி உறவில் சந்தேகப்படுதல், கடன் பிரச்சனை, வறுமை, விளைச்சலின்மை, கணவன் மாணவி சண்டையினால்   உண்டாகிற தற்கொலையிலிருந்து காக்கப்பட ஜெபிப்போம்.

9.       விவசாயக் குடும்பங்களில் தேவனுடைய சமாதானம், சந்தோஷம் உண்டாக, குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

10.   விவசாயிகள் மத்தியில் வல்லமையான ஊழியர்கள் எழும்ப, ஆத்தும அறுவடை உண்டாக, ஜெபக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபிப்போம்.

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைபடுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 1 நாளாகமம் 29:12

No comments:

Post a Comment