Friday, 21 October 2016

திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் தேவனுடைய ஊழியத்தை செய்யும் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் தேவனுடைய ஊழியத்தை செய்யும் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்


ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் எற்படுகிறதில்லை. எபிரெயர் 5:4 

1.       திருத்துறைப்பூண்டியில் தேவன் எழுப்பிக் கொடுத்த எல்லா ஊழியர்களுக்காக தேவனை ஸ்தோத்தரித்து  ஜெபிப்போம்.

சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 1தெசலோனிக்கேயர் 5:25

உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். அப்போஸ்தலர் 4:30   

2.       ஊழியர்களுக்கு தேவன் நல்ல சுகத்தை, பெலத்தை, ஆரோக்கியத்தைத் தர  ஜெபிப்போம்.

என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். சங்கீதம் 35:27

3.       ஊழியர்களின் குடும்பங்களுக்கு தேவபாதுகாப்பு உண்டாக ஜெபிப்போம்.

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம், உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய், இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:17

4.       ஊழியர்களின் பயணங்களுக்காக மற்றும் பிரயாணங்களுக்காக  ஜெபிப்போம்.

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11

கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121:8

5.       ஊழியர்கள் தரிசனம் பெற்றவர்களாக, தேவசித்தம் செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.

நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். அப்போஸ்தலர் 22:14,15.

புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே  என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். ரோமர் 11:13,14

6.       ஊழியர்கள் தேவன் அழைத்த அழைப்பில் உறுதியுடன் இருக்க ஜெபிப்போம்.

தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன். அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். 1கொரிந்தியர் 7:17,20.

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருகாலும் இடறிவிழுவதில்லை. 2பேதுரு 1:10.

7.       ஊழியர்கள் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க ஜெபிப்போம்.

என் தாசனாகிய மோசேயோ அப்படிபட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12:7

அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுதும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்திரத்தையும் குற்றத்தையும் கண்டுபிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. தானியேல் 6:4.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களைப் பெறுவான். ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிரவனோ ஆக்கினைக்குத் தப்பான். நீதிமொழிகள் 28:30.

8.       ஊழியர்கள் தேவனுக்காக வைராக்கியக்கியத்தோடு ஊழியஞ்செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.    

நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம். அப்போஸ்தலர் 6:4.

இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியபடுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலாத்தியர் 1:10.




No comments:

Post a Comment