Friday, 21 October 2016

திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் தேவனுடைய ஊழியத்தை செய்யும் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் தேவனுடைய ஊழியத்தை செய்யும் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்


ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் எற்படுகிறதில்லை. எபிரெயர் 5:4 

1.       திருத்துறைப்பூண்டியில் தேவன் எழுப்பிக் கொடுத்த எல்லா ஊழியர்களுக்காக தேவனை ஸ்தோத்தரித்து  ஜெபிப்போம்.

சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 1தெசலோனிக்கேயர் 5:25

உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். அப்போஸ்தலர் 4:30   

2.       ஊழியர்களுக்கு தேவன் நல்ல சுகத்தை, பெலத்தை, ஆரோக்கியத்தைத் தர  ஜெபிப்போம்.

என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். சங்கீதம் 35:27

3.       ஊழியர்களின் குடும்பங்களுக்கு தேவபாதுகாப்பு உண்டாக ஜெபிப்போம்.

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம், உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய், இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:17

4.       ஊழியர்களின் பயணங்களுக்காக மற்றும் பிரயாணங்களுக்காக  ஜெபிப்போம்.

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11

கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121:8

5.       ஊழியர்கள் தரிசனம் பெற்றவர்களாக, தேவசித்தம் செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.

நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். அப்போஸ்தலர் 22:14,15.

புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே  என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று, என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். ரோமர் 11:13,14

6.       ஊழியர்கள் தேவன் அழைத்த அழைப்பில் உறுதியுடன் இருக்க ஜெபிப்போம்.

தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன். அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். 1கொரிந்தியர் 7:17,20.

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருகாலும் இடறிவிழுவதில்லை. 2பேதுரு 1:10.

7.       ஊழியர்கள் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க ஜெபிப்போம்.

என் தாசனாகிய மோசேயோ அப்படிபட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12:7

அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுதும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்திரத்தையும் குற்றத்தையும் கண்டுபிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. தானியேல் 6:4.
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களைப் பெறுவான். ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிரவனோ ஆக்கினைக்குத் தப்பான். நீதிமொழிகள் 28:30.

8.       ஊழியர்கள் தேவனுக்காக வைராக்கியக்கியத்தோடு ஊழியஞ்செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.    

நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம். அப்போஸ்தலர் 6:4.

இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியபடுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலாத்தியர் 1:10.




Wednesday, 28 September 2016

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்காக ஜெபியுங்கள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் வாழும்  விவசாயிகளுக்காக ஜெபியுங்கள்


1.       விவசாயிகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்ள, இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

2.       விவசாயத்திற்குத் தேவையான மழையை தேவன் கட்டளையிட, விளைச்சல் காற்றினால், பூச்சிகளால், பெரு மழையினால் பாதிக்காதபடி, நல்ல விளைச்சல் உண்டாக ஜெபிப்போம்.

3.       குடி, போதை, பாவப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்கள், விடுதலையாக்கப்பட, மனந்திரும்புதல் உண்டாக ஜெபிப்போம்.

4.        விவசாயம் குறைந்து ரியல் எஸ்டேட்டாக மாறி வருகிறது. இந்த நிலை மாற, விவசாயத்தில் நஷ்டம் உண்டாகாதபடி, நல்ல வருமானம் கிடைக்க ஜெபிப்போம்.

5.       விலைவாசி உயர்வுக்குக் காரணமாயிருக்கிற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்க, விவசாயத்திற்குத் தேவையான மூல பொருட்களின் விலை குறைய ஜெபிப்போம்.

6.       அரசின் மூலமாய் விவசாயிகளுக்கு மானியம், விவசாயக்கடன் போன்ற சலுகைகள் எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்கப்பட, விவசாயிகள் அதைச் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள ஜெபிப்போம்.

7.       படிப்பறிவு இல்லாத மக்கள் மத்தியில் சுவிஷேச கூட்டங்கள் நடத்தும் போது இயேசுவின் திரைப்படங்கள், நாடகங்கள், செய்திகள் மூலமாக இயேசுவை அவர்கள் ஏற்றுக் கொள்ள ஜெபிப்போம்.

8.       விவசாயக் குடும்பங்களில் கணவன் மனைவி உறவில் சந்தேகப்படுதல், கடன் பிரச்சனை, வறுமை, விளைச்சலின்மை, கணவன் மாணவி சண்டையினால்   உண்டாகிற தற்கொலையிலிருந்து காக்கப்பட ஜெபிப்போம்.

9.       விவசாயக் குடும்பங்களில் தேவனுடைய சமாதானம், சந்தோஷம் உண்டாக, குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

10.   விவசாயிகள் மத்தியில் வல்லமையான ஊழியர்கள் எழும்ப, ஆத்தும அறுவடை உண்டாக, ஜெபக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட ஜெபிப்போம்.

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைபடுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 1 நாளாகமம் 29:12

Thursday, 22 September 2016

திருத்துறைப்பூண்டி தாலுக்கா அதை சுற்றியுள்ள கிராமங்களுக்காக ஜெபியுங்கள்



பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப் போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப் போலவும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு (திருத்துறைப்பூண்டிக்கு) இரக்கஞ்செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள் அவரை (இயேசுவை) நோக்கியிருக்கிறது. எங்களுக்கு (திருத்துறைப்பூண்டிக்கு)  இரங்கும் கர்த்தாவே எங்களுக்கு (திருத்துறைப்பூண்டிக்கு)  இரங்கும். சங்கீதம் 123:1-3   

1.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களுக்காகவும் தேவனை ஸ்தோத்தரித்து ஜெபிப்போம்.

2.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் சுவிசேஷ வாசல்கள் திறக்கப்பட, ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள, இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

3.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்பட, ஜனங்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட, ஆவி, ஆத்ம சரீரத்தில் விடுதலையைப் பெற்றுக் கொள்ள ஜெபிப்போம்.

4.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் கிரியை செய்கிற குடிகார ஆவி, விபச்சார வேசித்தன ஆவி, தகடு, தாயத்து, பாரம்பரியம், மூடப்பழக்கவழக்கங்கள், தற்கொலை ஒழிய, சத்துருவின் வல்லமைகள் கட்டப்பட ஜெபிப்போம்.

5.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தப்பட, ஜெபக் குழுக்கள் எழும்ப ஜெபிப்போம்.

6.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் இருக்கிற வாலிபர்கள் சந்திக்கப்பட, காதல், குடி, போதை, பாவப் பழக்கங்களிலிருந்து விடுதலையாக்கப்பட, இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள ஜெபிப்போம்.

7.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் செயல்படுகிற சுவிஷேச எதிர்ப்பாளர்கள் சந்திக்கப்பட, சுவிஷேசத் தடைகள் நீங்க ஜெபிப்போம்.

8.      திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பரிசுத்தமாய், சாட்சியாய் வாழ, ஆத்துமா ஆதாயம் செய்ய, சீஷர்களாக மாற, சபைகள் வளர்ந்து பெருக ஜெபிப்போம்.

9.       திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் காணப்படுகிற வறுமைகள் மாற, விவசாயத்தை நம்பியுள்ள ஜனங்களுக்கு மழையை தேவன் கட்டளையிட, கிராமங்கள் ஆசிர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

10.   திருத்துறைப்பூண்டி அதை சுற்றியுள்ள 77 கிராமங்களில் சுவிஷேசம் அறிவிக்கப்பட, தடையாயிருக்கிற கிராமக்கட்டுப்பாடுகள், ஜாதிக்கட்டுப்பாடுகள் நீங்க, ஊர்த் தலைவர் கண்களில் தேவனின் தயவு கிடைக்கச் செய்ய, ஊர்த் தலைவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.



                                                

திருத்துறைப்பூண்டியில் வாரந்தோறும் நடக்கும் சபை ஆராதனைக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

திருத்துறைப்பூண்டியில் வாரந்தோறும் நடக்கும் சபை ஆராதனைக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

உங்கள் இல்லம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு இடம்!


Friday, 22 April 2016

👍 https://www.facebook.com/BenjaminforChristJesus/

தேவ கிருபையால் கிறிஸ்துவின் வசனங்களை தமிழ் & ஆங்கிலத்தில் படிக்கவும், அறிந்துக்கொள்ளவும் ஓர் வேதாகம முகநூல் பக்கம்.
THE WORD OF CHRIST 💒 (TAMIL & ENGLISH) ✔LIKE ✔SHARE ✔TAG ✔INVITE 🚻 YOUR ALL FRIENDS OUR PAGE.
கிறிஸ்துவின் வசனம் 💒 (தமிழ் & ஆங்கிலத்தில்) ✔LIKE ✔SHARE ✔TAG ✔INVITE 🚻 YOUR ALL FRIENDS OUR PAGE.

Sunday, 28 February 2016

என் திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) அதை சுற்றியுள்ள கிராமமும் என் இயேசுவின் பாதத்தில் வரவேண்டும்.

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2 :3
என் திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) அதை சுற்றியுள்ள கிராமமும் என் இயேசுவின் பாதத்தில் வரவேண்டும்.
For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry. Habakuk 2:3

https://www.facebook.com/BenjaminForChrist

Sunday, 3 January 2016

THIRUTHURAIPOONDI A.G CHURCH WELCOMES YOU

Hope Centre Assembly of God (AG Church) @ Thiruthuraipoondi, Thiruvarur Dist in Tamil Nadu, South India.

Every Sunday 9.30am

We invite you for anointed praise & worship, Good fellowship, Prayer for needs, powerful preaching and encouraging word from the Word of God. we pray for sick and for special needs. You will be blessed by our time together.


For more details please contact:
Pastor T. Benjamin

Royal City (Madappuram Bus Stop),
Mannargudi Main Road,
Thiruthuraipoondi 614715.
Thiruvarur Dist. Tamil Nadu.


Hand Phone: 9842513842, 8883634035.

Email: benji.hepsi@yahoo.com / hopecentreag@gmail.com / 

திருத்துறைப்பூண்டி அசெம்பிளி ஆப் காட் சபை உங்களை அன்புடன் வரவேற்கிறது


COME AND SEE THE MIRACLOUS WORK OF GOD


THIRUTHURAIPOONDI HOPE CENTRE ASSEMBLY OF GOD CHURCH WELCOMES YOU ALL


HOPE CENTRE ASSEMBLY OF GOD WELCOMES YOU ALL